திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் உள்பட 6 பேர் வேட்புமனு தாக்கல்

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் உள்பட 6 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.;

Update: 2019-03-25 23:00 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் சுதாகரன், நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான டி.ஜி.வினயிடம், சுதாகரன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் அவர் தேர்தல் உறுதிமொழியை வாசித்தார்.

அப்போது மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொறுப்பாளர் ராஜசேகர் மற்றும் பலர் உடன் வந்தனர். இதையடுத்து அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த வக்கீல் இருதயராஜ், சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அவரும் உறுதிமொழி வாசித்தார். அப்போது கிறிஸ்தவ வன்னியர் சங்கத்தினர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பரசுராமன், பா.ம.க. மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவரும் உறுதிமொழி வாசித்தார். அப்போது பா.ம.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர். திண்டுக்கல்லை சேர்ந்த வெற்றிவேல் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் அனுப்பப்பட்டியை சேர்ந்த சைமன் ஜஸ்டின் நாம் தமிழர் கட்சி மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மனோகரன் நேற்று கலெக்டரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். 

மேலும் செய்திகள்