மது பாட்டிலால் குத்தி விவசாயி படுகொலை பணத்தகராறில் அண்ணன் வெறிச்செயல்
ஆலங்குடி அருகே பணத்தகராறில் மது பாட்டிலை உடைத்து விவசாயியின் நெஞ்சில் குத்தி படுகொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நக்கச்சேலம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவருக்கு ராமதாஸ் (வயது 38), கோவிந்தராஜ் (36) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக ஊரின் அருகே 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதனை அவரது தந்தை இருவருக்கும் பிரித்து கொடுத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த அண்ணன், தம்பி இருவரும் பின்னர் ஊருக்கு வந்து அவர்களுக்குரிய நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். தற்போது கோடை காலம் என்பதால் கிணற்றில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் இருவரும் நிலத்திற்கு பொதுவான இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்தனர். அதற்கான பங்கு தொகை ரூ.60 ஆயிரத்தை தருமாறு தனது தம்பி கோவிந்தராஜிடம், ராமதாஸ் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தராஜ் பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.
இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த ராமதாஸ், கோவிந்தராஜின் வீட்டிற்கு சென்று, ஆழ்குழாய் கிணறு அமைத்ததற்கான பணத்தை தருமாறு கூறி, தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மது போதையில் இருந்த கோவிந்தராஜூம், ராமதாசிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ராமதாஸ் மது பாட்டிலை உடைத்து கோவிந்தராஜின் நெஞ்சில் குத்தினார். இதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து பாடாலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் ராமதாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தகராறில் தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.