தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.-த.மா.கா. வேட்பாளர்கள் மனு தாக்கல்
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் த.மா.கா. வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில், தி.மு.க. வேட்பாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும், அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜனும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் 2 பேரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். முன்னதாக தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் அண்ணாதுரையிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக முன்னாள் அரசு வக்கீல் நமச்சிவாயம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்பாளருடன் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உபயதுல்லா, சோமசுந்தரம் ஆகியோர் உடன் சென்றனர். முன்னதாக மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
த.மா.கா. வேட்பாளர்
இதேபோல் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவருடைய சகோதரர் என்.ஆர்.ரெங்கராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
த.மா.கா. வேட்பாளருடன் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், கோவிந்தராசு எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் சென்றனர். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த த.மா.கா. வேட்பாளருடன் அ.தி.மு.க., த.மா.கா. பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் வந்தனர்.
பரபரப்பு
தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று ஒரே நேரத்தில் தி.மு.க. மற்றும் த.மா.கா வேட்பாளர்கள் வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பழனிமாணிக்கம் பேட்டி
தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் வெற்றி பெறுவது உறுதி. தி.மு.க. தலைவர் வருகைக்கு பின்னர் அது பிரகாசமாக உள்ளது. காவிரி டெல்டா பகுதியை ஒட்டுமொத்தமாக சூறையாட மத்திய அரசு தயாராகி உள்ளது. மக்களையும், மண்ணையும் மலடாக்க நினைக்கும் பா.ஜ.க., அ.தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர்.
நான் வெற்றி பெற்றால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நீண்ட கால கடன் வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற நடவடிக்கை எடுப்பேன். ஒரத்தநாட்டில் கலைக்கல்லூரி மட்டும் உள்ளது. அங்கு மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி தொடங்கி மகளிர் பல்கலைக் கழகம் ஏற்படுத்தப்படும். தஞ்சையில் இருந்து புதிய ரெயில் மற்றும், தற்போது இயங்கும் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆறு, குளம் தூர்வாரப்படும்
காவிரி டெல்டா பகுதியில் உள்ள ஆறு, ஏரி, குளங்களை தூர்வாரி தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சையில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகத்தை உலகத்தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சையில் இருந்து விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் எதிர்க்கும் சாகர்மாலா திட்டம், மீத்தேன் திட்டம் போன்ற திட்டங்களை கைவிட்டு, மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மேலும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சையில் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
என்.ஆர்.நடராஜன்
த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் கூறுகையில், “நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் வெற்றி பெற்றால் தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க முதல் குரல் கொடுப்பேன். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக்க நடவடிக்கை எடுப்பேன். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.