முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேர் கைது லாரிகள் பறிமுதல்
முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 லாரிகளை பறிமுதல் செய்தனர்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள கீழக்காடு சோதனைச்சாவடியில் முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பட்டுக்கோட்டையில் இருந்து முத்துப்பேட்டையை நோக்கி வந்த 3 லாரிகளை மறித்து போலீசார் சோதனை செய்தனர். இதில் மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து லாரி டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கரூரை சேர்ந்த தங்கவேல்(வயது38), கரூர் அருகே கவுடண்பட்டியை சேர்ந்த அண்ணாவி(26), வேதாரண்யம் அருகே உள்ள மருதூரை சேர்ந்த பிரபாகரன்(25) என்பதும் இவர்கள் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள ஆறுகளில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும் தெரிய வந்தது.
3 பேர் கைது
இதையடுத்து 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.