மன்னார்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் உதவி கலெக்டர் தொடங்கி வைத்தார்
மன்னார்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை உதவி கலெக்டர் தொடங்கி வைத்தார்.
சுந்தரக்கோட்டை,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் மன்னார்குடியில் நடைபெற்றது. ஊர்வலத்தை மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள்,வருவாய்துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு வாக்களிப்பதன் அவசியம், லஞ்சம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி வந்தனர்.
உறுதிமொழி
மன்னார்குடி தேரடியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பந்தலடி, காந்திசாலை வழியாக சென்று மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. அங்கு வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் மன்னார்குடி நகராட்சி ஆணையர்(பொறுப்பு) இளங்கோவன், தாசில்தார் லெட்சுமி பிரபா உள்பட பலர் கலந்துகொண்டனர்.