தாமரை படம் பொறிக்கப்பட்ட 266 கிராம் வெள்ளி நாணயங்கள் பறிமுதல் தேர்தல் பறக்கும்படையினர் நடவடிக்கை
பேராவூரணி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில் தாமரை படம் பொறிக்கப்பட்ட 266 கிராம் வெள்ளி நாணயங்கள் சிக்கியது. அந்த நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பேராவூரணி,
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம், பரிசு பொருட்கள் வாகனங்களில் எடுத்து செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும் படையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம், பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள காரங்குடா கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பேராவூரணி வட்ட வழங்கல் அதிகாரி வில்சன் தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி, ஏட்டு பாரதிதாசன் உள்ளிட்டோர் அடங்கிய பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள பீடி நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு வேன் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. அதை வழிமறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வேனில் வந்த விற்பனையாளர் ரூபன் என்பவர் 2 கிராம் எடை கொண்ட 133 வெள்ளி நாணயங்களை கொண்டு செல்வது தெரிய வந்தது.
மொத்தம் 266 கிராம் எடை கொண்ட அந்த வெள்ளி நாணயங்களை வாங்கியதற்கான ரசீது உள்ளிட்ட எந்த ஆவணங்களும் விற்பனையாளரிடம் இல்லை. இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி சரக்கு வேனில் கொண்டு செல்லப்பட்ட 266 கிராம் வெள்ளி நாணயங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் வெள்ளி நாணயங்கள் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கமலக்கண்ணன் முன்னிலையில் பேராவூரணியில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் யுவராஜ், கிராம நிர்வாக அதிகாரி முத்துகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த வெள்ளி நாணயத்தின் ஒருபுறத்தில் தாமரை படமும், மற்றொரு புறத்தில் லட்சுமி படமும் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் வெள்ளி நாணயங்கள் சிக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.