இளைஞர் அமைப்பில் ‘டைப்பிஸ்ட்’ பணி
மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் நேரு யுவகேந்திரா சங்கேதன்.
இளைஞர் மேம்பாட்டு அமைப்பான நேரு யுவகேந்திரா சங்கேதன் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர், அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணிகளுக்கு 225 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பணிக்கு 100 இடங்களும், அக்வுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 73 இடங்களும், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 52 இடங்களும் உள்ளன.
முதுநிலை பட்டதாரிகள் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கும், பிளஸ்-2 படிப்புடன், தட்டச்சு மற்றும் கணினி அறிவு பெற்றவர்கள் அக்கவுண்ட்ஸ் கிளார்க் பணிக்கும், 10-ம் வகுப்பு படித்தவர்கள் மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.
மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்களும், இதர பணிகளுக்கு 28 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இணையதளம் (nyks.nic.in) வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31-3-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.