பரங்கிப்பேட்டை அருகே, ஓட்டல் ஊழியர், விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை

பரங்கிப்பேட்டை அருகே ஓட்டல் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2019-03-24 22:45 GMT
பரங்கிப்பேட்டை, 

பரங்கிப்பேட்டை அருகே தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் பிரபுதேவா (வயது 25). இவர் சென்னையில் தங்கி ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கோவில் திருவிழாவிற்காக பிரபுதேவா தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருடைய தாய் செலவுக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே உனது சம்பளப் பணத்தை தா என்று பிரபுதேவாவிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் மனமுடைந்த பிரபுதேவா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் பலனின்றி பிரபுதேவா பரிதாபமாக இறந்தார். இதையறிந்த அவருடைய உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து சந்திரசேகரன் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்மகரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்