பால் வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், பால் வேனில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
குன்னம்,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரியலூர்- பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேரளி அருகே நேற்று மதியம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மஞ்சுளா, போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசம் தலைமையிலான பறக்கும் படையினர், அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பால் வேனை மறித்து, அதில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி மன்னார்பாளையம் அருகே புது ஏரியை சேர்ந்த மணிகண்டன்(வயது 28) என்பதும், சேலத்தை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த பணம் பறிமுதல்
பின்னர் அவர் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 20-ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியின் நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தியிடம் ஒப்படைத்தனர். இந்த பணத்தை மணிகண்டன் பால் விற்பனை செய்த கடைகளில் இருந்து வசூலித்து வந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொண்டு வரப்பட்டதா? என்பது குறித்து மணிகண்டனிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.