சுவாமிமலை கோவிலில் முருகன்-வள்ளி திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் முருகன்-வள்ளி திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கபிஸ்தலம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. ஆறுபடை முருகன் கோவிலில் இக்கோவில் 4-வது படை வீடாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டும் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. 21-ந் தேதி பங்குனி உத்திரத்தையொட்டி காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகன்-வள்ளி திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு சண்முகசாமி, வேடமூர்த்தியாக, வள்ளி நாயகியாருடன் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து திருவலஞ்சுழியில் உள்ள கோவிலில் வேடமூர்த்தி-வள்ளியுடன் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
யானை விரட்டும் நிகழ்ச்சி
பின்னர் சுவாமிமலை அரசலாற்றில் வள்ளி நாயகியாரை யானை விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வேடமூர்த்தி சுவாமிமலை கோவிலில் எழுந்தருளி சண்முகசாமியாக அருள்பாலித்தார். இதையடுத்து மாலை அலவந்திபுரம் நடுத்தெருவில் இருந்து நம்பிராஜன் சீர் கொண்டு வரும் நிகழ்ச்சியும், திருக்கல்யாணமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் இன்று (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. வருகிற 28-ந் தேதி விடையாற்றி விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.