மும்பையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த தொழில் அதிபர் ஆபாச படம் பார்த்ததாகவும் குற்றச்சாட்டு

மும்பையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் செல்போனில் ஆபாச படம் பார்த்த தொழில் அதிபர், அருகில் இருந்த பெண் பயணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் கூறியதால் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-03-24 22:00 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்துக்கு மும்பையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு விமானம் வந்தது. அதில் மும்பையை சேர்ந்த ராகேஷ் மோகன் வர்மா (வயது 56) என்பவர் வந்தார். அவரது இருக்கைக்கு அருகே மும்பையை சேர்ந்த பெண் ஒருவர், தனது குழந்தையுடன் பயணம் செய்தார்.

விமானம் நடுவானில் பறந்து வந்தபோது, ராகேஷ் மோகன்வர்மா தனது செல்போனில் ஆபாச படம் பார்த்தபடி, அருகில் குழந்தையுடன் அமர்ந்து இருந்த பெண் பயணியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதுபற்றி விமான பணிப்பெண்களிடம் கூறினார். இதையடுத்து தொழில் அதிபரை எச்சரித்ததுடன், அவருக்கு வேறு இருக்கையும் மாற்றி தரப்பட்டது.

பின்னர் அந்த விமானம், சென்னையில் தரை இறங்கியதும் விமான நிலைய போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. விமான நிலைய போலீசார், மும்பை தொழில் அதிபர் ராகேஷ் மோகன் வர்மாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்