“தாமிரபரணி, கருமேனியாறு இணைப்பு திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவேன்” நெல்லை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞான திரவியம் பேச்சு
“தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவேன்” என்று நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் பேசினார்.
திசையன்விளை,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் அறிமுக கூட்டம் திசையன்விளை பொன்மகாலில் நடந்தது. நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், பூங்கோதை எம்.எல்.ஏ., மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வேட்பாளர் ஞானதிரவியம் பேசியதாவது:-
சாதாரண தொண்டானான என்னை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளராக அறிவித்துள்ளார். தி.மு.க. ஆட்சியின்போது மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அதே போல் தி.மு.க. ஆட்சியின்போது தொடங்கப்பட்ட தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றுவேன். அதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் கிரகாம்பெல், ராதாபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெகதீஸ், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் ராஜம்ஜான், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் சித்திக், ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் ரைமண்ட், மாநில காங்கிரஸ் அமைப்பு செயலாளர் செல்வராஜ், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் விஜயபெருமாள், வக்கீல் தவசிராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் கல்யாணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், தாலுகா குழு உறுப்பினர் மணியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான், மாவட்ட செயலாளர் முகமது அலி மீரான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல்மைதீன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் பிலால் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். திசையன்விளை நகர செயலாளர் டிம்பர் செல்வராஜ் நன்றி கூறினார். மாலையில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி களக்காட்டில் செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் அறிமுக கூட்டம் மற்றும் பாளையங்கோட்டை செயல்வீரர்கள் கூட்டத்துக்கு, மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் தலைமை தாங்கினார். நெல்லை மாநகர செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், பொருளாளர் ராஜேஷ்முருகன், ம.தி.மு.க. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் மீரான் மைதீன், மாவட்ட செயலாளர் பாட்டப்பத்து முகமது, மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் ஜமால், முன்னாள் கவுன்சிலர் எஸ்.வி.சுரேஷ், பிரான்சிஸ் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.