அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
அரியலூர், ஜெயங் கொண்டம் தொகுதி களுக்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு பணி நடந்தது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களின் முதற்கட்ட தற்செயல் தேர்ந்தெடுக்கும் பணி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, நடைபெற இருக்கிற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019-ஐ முன்னிட்டு சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியின் கீழ் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவி ஆகியவைகள் முதற்கட்ட தற்செயல் தேர்ந்தெடுக்கும் முறை வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி இன்று (அதாவது நேற்று) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள இருப்பறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவி ஆகியவைகள் முதற்கட்ட தற்செயல் தேர்ந்தெடுக்கும் முறை மூலம் பெறப்பட்ட எண்களை கொண்டு பிரிக்கப்பட்டு, அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கான எந்திரங்களை அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள இருப்பறையிலும் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கான எந்திரங்களை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள இருப்பறையிலும் வைப்பதற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான பொறுப்பு அலுவலர் பாலாஜி, உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர் சத்தியநாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, தேர்தல் தனி வட்டாட்சியர் சந்திரசேகரன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.