தவளக்குப்பத்தில் டைல்ஸ் கடை உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

தவளக்குப்பத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் டைல்ஸ் கடை உரிமையாளரிடம் ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-03-23 22:30 GMT

பாகூர்,

நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுவை மாநில எல்லை பகுதி மற்றும் கிராமப்புறங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து தேர்தல் அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

தவளக்குப்பம் இடையார்பாளையத்தில் தேர்தல் அதிகாரி செல்வகணபதி தலைமையில் நேற்று முன்தினம் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடலூரில் இருந்து புதுவைக்கு வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது.

இதுபற்றி காரில் வந்தவரிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் அருகே சின்ன கங்கணாங்குப்பத்தில் டைல்ஸ் கடை வைத்துள்ள அசோக் என்பது தெரியவந்தது. ஆனால் காரில் எடுத்துவந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.

இதையடுத்து ரூ.6 லட்சத்து 20 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, புதுவை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்