கள்ளக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம்: அ.தி.மு.க. காமெடி கூட்டணி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அ.தி.மு.க. காமெடி கூட்டணி என்று கள்ளக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொன்.கவுதம சிகாமணியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் சின்னசேலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சேலம் மாவட்ட பகுதியில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
கள்ளக்குறிச்சியில் அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி 5 ஆண்டுகளுக்கு முன்பு நம்மிடம் வாக்குறுதி அளித்தார். அதாவது உங்களது வங்கிக்கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக கூறினார். ஆனால் செலுத்தவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு 48 முறை சுற்றுப்பயணம் செய்து உலக சாதனை படைத்த தலைவர் மோடி. அவர் தமிழகத்துக்கு 4 முறை மட்டுமே வந்துள்ளார். இதற்கான விமான செலவு மட்டும் ரூ.2500 கோடியாகும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கருணாநிதி வாக்குறுதி அளித் தார். ஆனால் விவசாய கடன் தள்ளுபடி என்பது சாத்தியமே இல்லை என்று அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர். தி.மு.க. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் விவசாய கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், நீட் தேர்வு விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையை பார்த்து அ.தி.மு.க.வினர் மிரண்டு போயுள்ளனர். தி.மு.க. தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. அன்புமணி, நோட்டுக்காகவும், சீட்டுக்காகவும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணி அல்ல, அது காமெடி கூட்டணி.
ராமதாஸ் ஒரு பேட்டியின்போது மோடிக்கும், அ.தி.மு.க. ஆட்சிக்கும் என்ன மதிப்பெண் போட்டுள்ளர்கள்? என்று கேட்டதற்கு ஜீரோ மதிப்பெண் கொடுப்பதாக சொன்னார். இதன்பின்னர் நிருபர் திருப்பி கேட்டதற்கு இதற்கு மேல் எதுவும் கொடுக்க முடியாது, என்று சொன்னார். ஆனால் அதே கட்சியோடு தற்போது கூட்டணி வைத்துள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பேராசிரியை நிர்மலாதேவி தன் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை உல்லாசத்துக்கு அழைத்து மிரட்டிய சம்பவம் நீங்கள் அறிந்ததே.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
கியாஸ் விலை மோடி ஆட்சியில் மூன்று, நான்கு மடங்கு அதிகமாகி உள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் பலமடங்கு அதிகமாக உள்ளது. ‘நீட்‘ தேர்வு விவகாரத்தில் நம்மை ஏமாற்றிய மோடிக்கு ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு மூலம் முடிவு கட்ட வேண்டிய நாள். எனவே நமது தி.மு.க. வேட்பாளர் பொன்.கவுதம சிகாமணிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., உதயசூரியன் எம்.எல்.ஏ., விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் செல்வநாயகம், நகர செயலாளர் சுப்ராயலு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.