கள்ளக்குறிச்சி பகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷ் வாக்கு சேகரிப்பு
கள்ளக்குறிச்சி பகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
தியாகதுருகம்,
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று தியாகதுருகத்துக்கு வந்த சுதீஷ், தியாகதுருகம் நகர அ.தி.மு.க. செயலாளர் ஷியாம் சுந்தர், ஒன்றிய செயலாளர் அய்யப்பா ஆகியோரை கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
பின்னர் பா.ம.க., பா.ஜனதா, த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டினார்.
இதனை தொடர்ந்து தியாகதுருகம் வாரச்சந்தைக்கு சென்ற சுதீஷ், அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர்கள் ஜெய்சங்கர், இளையராஜா, பாசறை நகர செயலாளர் கிருஷ்ணராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் வைத்திலிங்கம், மாநில தொழிற்சங்க துணை செயலாளர் தாமு சக்திவேல், துணைச் செயலாளர் வரதம்மாள் ஜெயச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பாசறை மாவட்ட இணை செயலாளர் ராஜா, முன்னாள் நகர செயலாளர் ராஜி, பாசறை பொருளாளர் ஏழுமலை, தே.மு.தி.க. நகர செயலாளர் எம்.எஸ்.முருகன், மாவட்ட அவைத்தலைவர் கோவி முருகன், பா.ஜ.க. நிர்வாகி பச்சையாப்பிள்ளை, அவைத்தலைவர் முத்து, முன்னாள் ஊராட்சி தலைவர் சிவலிங்கம் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதேபோல் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய பகுதியில் உள்ள வியாபாரிகள், பல்வேறு சங்கத்தினர் மற்றும் அமைப்பினர் உள்ளிட்டோரை சந்தித்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும் சின்னசேலம் காந்திநகர் பகுதி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவருடன் தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி, கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. நகர செயலாளர் பாபு, ஒன்றிய செயலாளர் ராஜசேகர், முன்னாள் நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணன்,தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் நல்லத்தம்பி, விழுப்புரம்-கடலூர் கூட்டுறவு நெசவாளர்கள் இணைய தலைவர் எஸ்.எம்.பி.பரமசிவம், சின்னசேலம் அ.தி.மு.க. நகர செயலாளர் குணசேகர், இளைஞர் பாசறை செயலாளர் ராகேஷ், தே.மு.தி.க. நகர செயலாளர் செல்வம், பா.ம.க. நகர செயலாளர் அசோக், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் கருணாகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.