நாமக்கல்லில் உதவி செலவின பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உதவி செலவின பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
நாமக்கல்,
நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மேற்கொள்ளும் செலவுகளை கண்காணிப்பதற்காக தேர்தல் ஆணையம் செலவின பார்வையாளர்களாக மயூர் காம்ளே, ராஜேஷ் ஆகியோரை நியமித்து உள்ளது. இந்த செலவின பார்வையாளர்களுக்கு துணையாக உதவி செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பிரசாரங்களை மேற்கொள்ளும் போதும், கூட்டங்கள் நடத்தும் போதும் ஆகும் செலவினங்களை கணக்கிட உள்ளனர். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ள பொதுமக்கள் வரும் வாகனங்கள், அவர்கள் உட்காருவதற்காக போடப்படும் நாற்காலிகள், கூட்ட மேடை, ஒளி, ஒலி அமைப்பு, கொடிகள் மற்றும் தோரணங்கள் ஆகியவற்றை கணக்கிட உள்ளனர்.
இந்த கணக்கீடுகள் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் அல்லது சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரின் செலவு கணக்கில் சேர்க்கப்பட்டு நிழற்பதிவேடுகளாக பராமரிக்கப்படும். இதே செலவினங்களுக்காக அரசியல் கட்சியினர் சமர்ப்பிக்கும் செலவு ஆவணங்களை இந்த நிழற்பதிவேடுகளுடன் சரிபார்த்து, அதன் அடிப்படையில் செலவின பார்வையாளர்கள் தங்களது பணிகளை மேற்கொள்வார்கள்.
இப்பணிகள் குறித்து உதவி செலவின பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் செலவின பார்வையாளர்கள் மயூர் காம்ளே, ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பு அலுவலர் நந்தகுமார், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு தொடர்பு அலுவலர் சீனிவாசன், ஊடக மைய தொடர்பு அலுவலர் மோகன்ராஜ் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.