நாசரேத் அருகே, கிறிஸ்தவ ஆலயத்தில் ரூ.27 ஆயிரம் திருட்டு-வாலிபர் கைது

நாசரேத் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் ரூ.27 ஆயிரம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-03-22 22:59 GMT
நாசரேத், 

நாசரேத் அருகே நெய்விளையில் தூய இம்மானுவேல் ஆலயம் உள்ளது. இங்கு கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை முன்னிட்டு, காலை முதல் இரவு வரையிலும் ஆலயம் திறந்து இருப்பது வழக்கம். இந்த ஆலயத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சிமியோன் மகன் ஜெயசீலன் (வயது 19) நேற்று மதியம் பிரார்த்தனை செய்வது போன்று சென்றார்.

அப்போது ஆலயத்தில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட ஜெயசீலன், அங்கிருந்த உண்டியலில் திருட திட்டமிட்டார். இதற்காக அவர் நீளமான ஈக்குச்சியில் பசையை தடவி, அதனை உண்டியலின் துவாரம் வழியாக விட்டு, உண்டியலில் இருந்த பணத்தை ஒவ்வொன்றாக வெளியே எடுத்தார். இவ்வாறு ஜெயசீலன் மொத்தம் ரூ.27 ஆயிரத்தை உண்டியலில் இருந்து திருடினார்.

அப்போது ஆலயத்துக்கு வந்தவர்கள், ஜெயசீலனை கையும், களவுமாக பிடித்து, அவரிடம் இருந்து ரூ.27 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆலய பொருளாளர் பக்தசிங் அளித்த புகாரின்பேரில், நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயானந்த் வழக்குப்பதிவு செய்து, ஜெயசீலனை கைது செய்தார்.

மேலும் செய்திகள்