திருவள்ளூர் (தனி), ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்
திருவள்ளூர் (தனி), ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. நேற்று திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்பாளரான கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வெற்றிச்செல்வி திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான, மகேஸ்வரி ரவிக்குமாரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அந்த கட்சியின் நிர்வாகிகள் சுரேஷ்குமார், நல்லதம்பி, தேவா ஆகியோர் உடன் இருந்தனர்.
அதேபோல பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக அன்புச்செழியன் கட்சியின் மாநில செயலாளர் பெரியார் அன்பன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் சந்திரசேகர் ஆகியோருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்திய குடியரசு கட்சி சார்பில் வேட்பாளர் ரவி பறையனார் கட்சியின் மாநிலத் தலைவர் சூசை, மாநில துணைத்தலைவரும் நடிகருமான பவர் ஸ்டார் சீனிவாசன், திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஷ் ஆகியோருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
தேச மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் விக்ரமன் வேட்பு மனு தாக்கல் செய்தார். நேற்று ஒரே நாளில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீபெரும்புதூர் தாசிதார் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேந்திரன் தன்னுடைய கட்சியினருடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் தன்னுடைய ஆரவாளர்களுடன் மேளதாளம் முழங்க, கரும்புகளுடன் மாட்டுவண்டியில் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்தார்.
இந்திய கம்யூனிஸ்டு் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியின் வேட்பாளராக அம்பத்தூரை சேர்ந்த கே.பழனிவேல் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட, ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியுமான சுந்தரமூர்த்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
காஞ்சீபுரம்(தனி) நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சிவரஞ்சனி மாட்டு வண்டியில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.