சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;

Update: 2019-03-22 22:45 GMT
விழுப்புரம்,

உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் மகன் மாரிமுத்து (வயது 25). ரவுடியான இவர் மீது கச்சிராயப் பாளையம் பகுதியில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், தகராறு வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரத்திற்கு முன்பு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக மாரிமுத்துவை கச்சிராயப்பாளையம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் மாரிமுத்துவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து மாரிமுத்துவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கச்சிராயப்பாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்