டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரி நாள் விழா:நாட்டுக்கு சேவையாற்ற மாணவர்கள் முன்வர வேண்டும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஷீலா ஸ்டீபன் பேச்சு
நாட்டுக்கு சேவையாற்ற மாணவர்கள் முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் ஷீலா ஸ்டீபன் பேசினார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் கல்லூரி நாள் விழா, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி வளாகத்தில் உள்ள சி.பா.ஆதித்தனார் நூற்றாண்டு கலையரங்கில் நேற்று மாலையில் நடந்தது. ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் சுப்பிரமணியம் வரவேற்று பேசினார்.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி ஆண்டறிக்கையை முதல்வர் பெவின்சன் பேரின்பராஜிம், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி ஆண்டறிக்கையை முதல்வர் சுவாமிதாசும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆண்டறிக்கையை முதல்வர் மரிய செசிலியும் வாசித்தனர்.
விழாவில் சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் ஷீலா ஸ்டீபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அப்போது, அவர் பேசும்போது கூறியதாவது:-
திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதி மக்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கில் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் இங்கு ஆதித்தனார் கல்லூரியை தொடங்கினார். அவரது வழியில் அவரது மைந்தர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் இங்கு அனைத்து துறைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கல்லூரிகளை தொடங்கி கல்வி தொண்டாற்றினார்.
இதனால் ஆன்மிக நகரான திருச்செந்தூர் கல்வியின் கலங்கரை விளக்காக மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது. பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அனைத்து விளையாட்டு போட்டிகளையும் ஊக்குவித்து, அளப்பரிய உதவிகளை செய்தார். இதனால் அனைத்து விளையாட்டுகளிலும் தரமான வீரர்கள், வீராங்கனைகள் உருவானார்கள்.
அதேபோன்று இங்கு பயின்ற மாணவ-மாணவிகள் நமது நாட்டிலும், வெளிநாடுகளிலும் உயரிய பதவிகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இங்கு பயின்ற மாணவ-மாணவிகள் தரமான ஆசிரியர்களாக பரிணமித்து, எண்ணற்ற மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள தனித்திறமையை கண்டறிய வேண்டும். பின்னர் அதனை மேம்படுத்தி வளர்த்து கொண்டு, தேவையான நேரத்தில் வெளிப்படுத்துவதின் மூலம் சாதனையாளராகலாம்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தனது வாழ்நாளில் பல சாதனைகள் புரிந்தாலும், அவர் மாற்றுத்திறனாளிகள் நடக்க பயன்படுத்துவதற்காக எடை குறைந்த உபகரணத்தை கண்டுபிடித்ததையே சாதனையாக கருதி மகிழ்ந்தார். அதேபோன்று நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவையாற்ற மாணவர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆண்டு மலர்களை ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் சுப்பிரமணியம் வெளியிட்டார். அவற்றை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் ஷீலா ஸ்டீபன் பெற்று கொண்டார்.
பின்னர் அவர், கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கும், பல்கலைக்கழக அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.
விழாவில் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில், ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன் நன்றி கூறினார்.