அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாதா? ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாதா? என்பது குறித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
அலங்காநல்லூர்,
தேனி நாடாளுமன்ற தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர், மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மஞ்சமலைசுவாமி கோவிலில் நேற்று சாமி கும்பிட்டுவிட்டு பிரசாரத்தை தொடங்கினார்.
அவருக்கு ஆதரவாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்ட பகுதியான அலங்காநல்லூர் பகுதிகளில் பிரசாரம் செய்தார். அவருக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து மலைப்பாதை வழியாக 1 கி.மீ. தூரம் வரை நடந்து சென்று, அங்குள்ள மஞ்சமலை, அய்யனார்சாமி கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தி ஓ.பன்னீர்செல்வமும், வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரும் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களால் வழிநடத்தப்பட்ட இயக்கம்.
இதில் உள்ள அடிப்படை கட்டமைப்பு தொண்டர்களால் அமைக்கப்பட்டது. எனவே அ.தி.மு.க. ஆட்சிதான் தமிழகத்தில் நீடிக்கும்.
அ.தி.மு.க.வில் கருத்து வேறுபாடுகள் உள்ளதாக செய்திகள் வருகின்றன. அப்படி எதுவும் கிடையாது. தினகரன் கட்சியாலும், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களாலும் வாக்குகள் பாதிக்காது.
அரசியலுக்கு வாரிசுகள் வரக் கூடாது என்று எந்த சட்டத்திலும் கூறவில்லை.
கட்சியில் செயல்பாடுகள் மற்றும் தகுதி அடிப்படையிலேயே வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பிரசாரத்தின் போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய தலைவர் ராம்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா உள்பட நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.