கிருஷ்ணகிரி, ஓசூர் தொகுதிகளுக்கு 2-வது நாளாக ஒருவர் கூட மனுதாக்கல் செய்யவில்லை
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற, ஓசூர் இடைத்தேர்தலுக்கு நேற்று 2-வது நாளாகவும் ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை.
ஓசூர்,
நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. அதன்படி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபாகரிடமும், ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள், ஓசூர் உதவி கலெக்டரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான விமல்ராஜிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால் மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் கிருஷ்ணகிரி தொகுதியிலும், ஓசூர் தொகுதியிலும் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் 2 தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என ஒருவர் கூட வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய, வருகிற 26-ந் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.