வானவில் : யமஹாவின் ‘டார்க்நைட் பாசினோ’

இரு சக்கர வாகன உற்பத்தியின் முன்னிலை வகிக்கும் ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனத் தயாரிப்புகளில் பிரபலமானது பாசினோ.

Update: 2019-03-20 11:00 GMT
பாசினோ நிறுவனம் சமீபத்தில் அனைத்து ஸ்கூட்டர்களிலும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) அறிமுகம் செய்தது. இது தவிர வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணத்தில் வாகனங்களை தயாரித்து தருவதாகவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்போது டார்க் நைட் எனும் வண்ணத்தில் பாசினோ ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.56,793. மற்ற வண்ண ஸ்கூட்டர்களை விட இதன் விலை ரூ.1,500 அதிகமாகும். இதே நிறத்தில் சல்யூடோ ஆர்.எக்ஸ்., ரே இஸட்.ஆர். ஆகிய மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களிலும் கிடைக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

யமஹா நிறுவனம் பாசினோ, சிக்னஸ் ஆல்பா, சிக்னஸ் ரே இஸட், சிக்னஸ் ரே இஸட்.ஆர்., சிக்னஸ் ரே இஸட்.ஆர். ஸ்ட்ரீட் ராலி ஆகிய 5 மாடல்களில் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இவை அனைத்துமே 113 சி.சி. திறன், 7.2 ஹெச்.பி. மற்றும் 8.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை திறனைக் கொண்டவை. விரும்பிய வண்ணத்தில் வாகனங்கள் வாங்கும் வசதியை யமஹா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

இந்த முறைக்கு பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது. இதனால் அனைத்து மாடல்களிலும் இதுபோன்ற வசதியை அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்