நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல், மாவட்ட தேர்தல் உதவி அலுவலர் நேரடி ஆய்வு

நிலக்கோட்டை தொகுதியில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி தேர்தல் உதவி அலுவலர் வேலு வேட்புமனுக்கள் பெறப்படும் பகுதியை ஆய்வு செய்தார்.

Update: 2019-03-19 22:45 GMT
நிலக்கோட்டை, 

நிலக்கோட்டையில் சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் நடக்க உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலருமான வேலு நேற்று நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை ஆய்வு செய்தார்.

பல்வேறு அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் அதிகாரிகள் செய்து கொடுக்க உத்தரவிட்டார். மேலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி அதிகாரிகள் செயல்பட்டால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்பதால், அதிகாரிகள் கவனமாக பணி செய்ய வேண்டுகோள் விடுத்தார். மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் உரிய பாதுகாப்பு அளிக்க தகுந்த ஆலோசனையும் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீனத்பானு, தாசில்தார் நவநீதகிருஷ்ணன், தலைமையிட துணை தாசில்தார் ராமசாமி, தேர்தல் நடத்தும் உதவி துணை தாசில்தார் டேனியல், போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமாரன், நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி, வருவாய் ஆய்வாளர் ராமசாமி, கிராம நிர்வாக அலுவலர் ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்