பா.ஜனதா சார்பில் சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டி: சீனிவாசபிரசாத் அறிவிப்பு
மைசூருவில் முன்னாள் மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான சீனிவாசபிரசாத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மைசூரு,
நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 20 ஆண்டுகள் ஆகிறது. இப்போது சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவரை நாடாளுமன்றம், சட்டசபை என மொத்தம் 13 தேர்தல்களை சந்தித்துள்ளேன். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் பா.ஜனதா தொண்டர்கள், ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிடுமாறு வற்புறுத்தினர்.
இதன் காரணமாக சாம்ராஜ்நகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறேன். வருகிற 26-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.