சேலத்தில் இரும்பு தகடு திருடிய வழக்கில் 2 பேர் கைது

சேலத்தில் இரும்பு தகடு திருடி மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-03-18 22:15 GMT
சேலம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் ரெட்டிப்பட்டி பெருமாள்மலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் செந்தூரான் (வயது 24). இவர் சேலத்தில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே நேற்று முன்தினம் மேம்பாலம் கட்டும் பணியில் அவர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சிறிது நேரம் நின்று கொண்டிருந்தனர். திடீரென்று மேம்பாலம் கட்டும் பணிக்காக வைக்கப்பட்டு இருந்த இரும்பு தகடுகளை திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றனர்.

அப்போது செந்தூரான் மற்றும் ஊழியர்கள் அவர்களை துரத்தி சென்று பிடித்தனர். பின்னர் 2 பேரையும் சூரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த மோகன் (34), துரைசாமி (32) என்று தெரிந்தது.

மேலும் இருவரும் இரும்பு தகடுகள் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 கிலோ இரும்பு தகடுகளை போலீசார் மீட்டனர்.

மேலும் செய்திகள்