தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 2 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு
தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 2 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டசபை இடைத்தேர்தல் அடுத்தமாதம்(ஏப்ரல்) 18–ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
தஞ்சை நாடாளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குவதால் வேட்புமனு தாக்கல் செய்ய தஞ்சை கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அண்ணாதுரையிடமும், தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேசிடமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டசபை தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேசிடமும், தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அருணகிரியிடமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
வேட்பாளர்களுடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நிறையபேர் வருவார்கள். அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் நிறுத்தப்படுவார்கள். இதற்காக நிலஅளவையர் உதவியுடன் 100 மீட்டர் தூரத்தை அளந்து வெள்ளை நிறத்திலான எல்லைக்கோடு வரையப்பட்டுள்ளது. இந்த பகுதியில் போலீசார் இரும்பினால் ஆன தடுப்புகளை அமைத்துள்ளனர். வேட்பாளருடன் வரும் வாகனங்களை 100 மீட்டர் தொலைவில் போலீசார் தடுத்து நிறுத்துவார்கள். பின்னர் அங்கிருந்து வேட்புமனு தாக்கல் செய்யப்படும் அலுவலக வளாகம் வரை 3 வாகனங்களில் 15 பேர் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடத்திற்கு வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதி அளிப்பார்கள். மற்றவர்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். வேட்புமனு காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெறும். வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களான தஞ்சை கலெக்டர் அலுவலகம் மற்றும் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மெட்டல் டிடெக்டர் கருவியும் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர். பின்னர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கூறும்போது, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 100 போலீசாரும், தாசில்தார் அலுவலகத்தில் 25 போலீசாரும், கலெக்டர் அலுவலகத்தில் 100 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார்.