திருச்சி விமான நிலையத்தில் 91½ பவுன் கடத்தல் நகை பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையை சேர்ந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2019-03-17 22:45 GMT
செம்பட்டு,

வெளிநாடுகளில் இருந்து திருச்சி வழியாக தங்க நகைகள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையை சேர்ந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டுவந்த உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த விமானத்தில் பயணம் செய்த மலேசியாவை சேர்ந்த மகேந்திரன், கேசவன் செல்வேந்திரன் ஆகியோர் 91½ பவுன் நகைகளை தங்களது உடைமைகளுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடத்தல் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.22¾ லட்சம் இருக்கும். மேலும் இதுதொடர்பாக 2 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்