போலீஸ் போல நடித்து பணம் பறித்த வாலிபர் கைது
போலீஸ் போல நடித்து பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
ஆவடியைச் சேர்ந்தவர் சேகர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 3-ந் தேதி சென்னை கேரஜ் ரெயில் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம்., மையத்தில் பணத்தை எடுத்துவிட்டு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர், சேகரை வழிமறித்து தான் ஒரு போலீஸ் என்றும், உங்கள் மீது சந்தேகமாக உள்ளது. போலீஸ் நிலையம் வந்து கையெழுத்து போட்டு விட்டு போ என்று கூறி அழைத்து சென்றார்.
சிறிதுதூரம் சென்றவுடன் சேகரின் செல்போன் மற்றும் ரூ.3 ஆயிரத்தை பறித்துக்கொண்டு மிரட்டினார். பின்னர் ஒரு வழியாக அந்த நபரிடம் இருந்து செல்போனை மட்டும் வாங்கி கொண்டு சேகர் சென்று விட்டார். இதுகுறித்து ஐ.சி.எப் போலீசில் புகார் அளித்தையடுத்து போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இதற்கிடையே சந்தேகத்தின்பேரில் அயனாவரத்தை சேர்ந்த தமிழரசன் (வயது35) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தமிழரசன் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் ஐ.சி.எப். ஊழியர்கள் மற்றும் காதலர்களை வழி மறித்து போலீஸ் என்று கூறி பணம் பறித்துள்ளார். மேலும் சிலரிடம் கத்தியை காட்டி மிரட்டியும் வழிப்பறி செய்துள்ளார்.
மேலும் தன்னை போலீஸ் என்று மற்றவர்கள் நம்ப வேண்டும் என தனது செல்போனில் போலீஸ் வாக்கி டாக்கியில் வரும் சத்தத்தை வைத்திருப்பார். இதையடுத்து தமிழரசனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிள் மற்றும் கத்தி, செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.