வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் 1 ரூபாய் நாணயங்களை கொள்ளையடித்த 3 பேர் கைது
மாட்டுங்காவில் உள்ள வங்கியில் புகுந்து 1 ரூபாய் நாணயங்களை கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை மாட்டுங்காவில் தேனா வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கில் கடந்த மாதம் 2-ந் தேதி 3 பேர் கும்பல் கழிவறை வழியாக உள்ளே நுழைந்தது.
அவர்கள் வங்கி லாக்கர்களை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து, வங்கியில் இருந்த 1 ரூபாய் நாணயங்கள் அடங்கிய பொட்டலத்தை தூக்கிக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.
அதில் ரூ.16 ஆயிரத்து 700 மதிப்புள்ள 1 ரூபாய் நாணயங்கள் இருந்தன.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் கொள்ளையர்களின் உருவம் தெளிவாக பதிவாகாததால் அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், வங்கியில் கொள்ளையடித்தவர்கள் காசிநாத் வசந்த், சேத்தமன் மனோகர், பிரசாந்த் பண்ட்ரே என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் வெவ்வேறு இடங்களில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.