திருச்சி விமான நிலையத்தில் ரூ.11 லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி விமான நிலையத்துக்கு ஒரு விமானம் வந்தது.

Update: 2019-03-12 22:45 GMT
செம்பட்டு,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி விமான நிலையத்துக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது மதுரையை சேர்ந்த சரவணன் என்ற பயணி தனது உடைமையில் மறைத்து ஒரு தங்க சங்கிலி மற்றும் 10 வளையல்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

அந்த நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 352 கிராம் எடை கொண்ட அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.10 லட்சத்து 85 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. சரவணனிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்