பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவிகள் நூதன போராட்டம்

தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்து கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-12 22:30 GMT
புதுக்கோட்டை,

பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினர், அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. இதேபோல புதுக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் வன்கொடுமைக்கு உச்சபட்ச கொடூர (மரண) தண்டனை அமல்படுத்து, அதுவரை தேர்தலை ரத்துசெய். பெண்டீரே விழித்தெழுங்கள் உன்னை சிதைப்பவனின் பிறப்புறுப்புகளை அறுத்தெறியுங்கள், என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்து கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் வலம்வந்ததால், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்