சீர்காழி அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
சீர்காழி அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சீர்காழி,
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஓலையாம்புத்தூர், கொண்டத்தூர், வைத்தியநாதபுரம், அரசன்குப்பம், குருமானக்குடி, கூத்தூர், மேல கொண்டத்தூர், கீழ கொண்டத்தூர், தற்காஸ் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடந்த ஆண்டு பயிர்க்காப்பீடு செய்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்குவதற்கான கிராமங்களின் பெயர்களை காப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் மேற்கண்ட கிராமங்களின் பெயர்கள் விடுப்பட்டுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி சீர்காழி தாசில்தார் அலுவலகம், கூட்டுறவு அலுவலகம், காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றில் மனு அளித்தனர். ஆனாலும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி சீர்காழி அருகே கதிரமங்கலம் கடைவீதியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு விவசாய சங்க நிர்வாகி சந்திரன் தலைமை தாங்கினார். அப்போது விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் சபிதாதேவி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, வருவாய் ஆய்வாளர் ராஜேஷ், கிராம நிர்வாக அதிகாரி நவநீதன் ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய பயிர்க்காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதி அளித்தார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.