பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டியில் புதிதாக கட்டப்படும் சார்பதிவாளர் அலுவலகத்தை கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைத்திட கோரி பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் தற்காலிக கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதற்கான சொந்த கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.82 லட்சம் நிதி ஒதுக்கியது. கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே பெத்திக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 10 செண்ட் இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு கடந்த 8-ந் தேதி பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிலையில், மேற்கண்ட நடவடிக்கையை கண்டித்தும், பேரூராட்சி அலுவலகம் அருகே ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு நிலத்தில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தை அமைக்க கோரியும் கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் வேலு தலைமை தாங்கினார். இதில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு பஜாரையொட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே 20 செண்ட் இடம் ஒதுக்கீடு செய்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி தீர்மானம் போட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில், போக்குவரத்திற்கு வசதி இல்லாத இடத்தில் பேரூராட்சி எல்லையை தாண்டிய வேறு ஒரு பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் அமைக்கப்படுவது பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.