மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து: புகார் பெட்டியில் மனுக்கள் போட ஏற்பாடு
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், புகார் பெட்டியில் மனுக்களை போட்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்ப்பட்டு இருந்தன.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும், மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடக்கும். தற்போது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தற்காலிகமாக அந்த கூட்டம் தேர்தல் முடியும் வரை நடத்தப்படாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும் இதற்கு மாற்று ஏற்பாடாக கலெக்டர் அலுவலக கட்டிட வளாகத்தில் 2 புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. மக்கள் குறைதீர் கூட்டத்திற்காக வந்த பொதுமக்கள் தங்களதுகோரிக்கை மனுக்களை அதில் போட்டு விட்டு சென்றனர். தேர்தல் முடிந்ததும், இந்த மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரூர் அருகேயுள்ள மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்த பெண்கள் புகார் பெட்டியில் போட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கரூரை சேர்ந்த ஒரு தம்பதியினர் எங்களிடம் வந்து, மத்திய-மாநில அரசு மூலம் கடன் வாங்கி தருவதாகவும், அதனை தவணை முறையில் திருப்பி செலுத்த வசதி இருக்கிறது என ஆசை வார்த்தை கூறினர். அதனை நம்பி ரூ.1 லட்சம் அவர்களிடம் சிறு, சிறு தொகையாக செலுத்தினோம். இந்த நிலையில் கடன் வாங்கி தராமல் ஏமாற்றிவிட்டு, கட்டிய தொகையையும் திருப்பிதர மறுக்கிறார்கள். எனவே அந்த தம்பதி மீது நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.