வனத்துறையில் 564 வேலைவாய்ப்புகள்

தமிழக வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், தற்போது வனக் காவலர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 564 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் 99 பணியிடங்கள் பழங்குடியின பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.;

Update: 2019-03-11 09:32 GMT
மற்றவர்களுக்கான இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேவையான சான்றுகளை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். மே 3-வது வாரத்திற்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

இது பற்றிய விரிவான விவரங்களை https://www.forests.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்