தமிழகத்தில் கான்ஸ்டபிள் பணிக்கு 8826 இடங்கள்
தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சுருக்கமாக டி.என். யூ.எஸ்.ஆர்.பி. எனப்படுகிறது.
தற்போது இந்த அமைப்பு தமிழக காவல்துறை, சிறைத்துறை, மற்றும் தீயணைப்பு பிரிவில் கான்ஸ்டபிள் (இரண்டாம் நிலை காவலர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
காவல்துறையில் ஆண்களுக்கு 5 ஆயிரத்து 962 இடங்களும், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 2 ஆயிரத்து 465 இடங்களும், சிறைத்துறையில் மொத்தம் 208 இடங்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 191 இடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 8 ஆயிரத்து 826 இடங்கள் நிரப்பப்படுகிறது.
இந்த பணிகளுக்கு 1-7-2019-ந் தேதியில் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் தமிழை ஒரு பாடமாக படித்திருப்பது அவசியம்.
எழுத்துத் தேர்வு, உடல் தகுதி மற்றும் உடல்திறன் தேர்வு, சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விரிவான விவரங்களை www.tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு ஏப்ரல் 8-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.