தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள் விரைவு மின்சார ரெயிலை இயக்காததால் அவதி
தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள். விரைவு மின்சார ரெயில் இயக்காததால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னை,
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி நடந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். எக்ஸ்பிரஸ் ரெயில் வழித்தடத்தில் மின்சார ரெயில் இயக்கப்பட்டது தான் விபத்துக்கு காரணம் என பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு பிறகு எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த சென்னை கடற்கரை-செங்கல்பட்டு விரைவு மின்சார ரெயில் இயக்கப்படவில்லை. விரைவு மின்சார ரெயில் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெற்கு ரெயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் பரங்கிமலை ரெயில் நிலையத்தில், நடைமேடையை இடித்து தண்டவாளத்தை நகர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மற்ற ரெயில் நிலையங்களில் சிறு மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து ரெயில்வே வாரிய பாதுகாப்பு கமிஷனர் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து விரைவு மின்சார ரெயில்கள் இயக்குவதற்கான அனுமதியை வழங்கினார். பயணிகளின் மிகுந்த எதிர்பார்ப்பான இந்த ரெயில் கூடிய விரைவில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஷ்ரஸ்தா தெரிவித்தார். ஆனால் பல்வேறு காரணங்களுக்காக விரைவு மின்சார ரெயில் சேவை இயக்கப்படாமல் உள்ளது.
புறநகரில் இருந்து வரும் பல பயணிகள் கிண்டி, தியாகராயநகர், நுங்கம்பாக்கம் மற்றும் எழும்பூர் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் அனைவரும் தாம்பரம் மார்க்கமாகவே வேலைக்கு செல்கின்றனர்.
செங்கல்பட்டில் இருந்து காலையில் மின்சார ரெயில்கள் சரியான நேரங்களில் இயக்கப்படாததால், பொதுமக்கள் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயிலையும், செங்கல்பட்டில் இருந்து வந்த மின்சார ரெயில்களுக்கு முன்னதாக தாம்பரத்தில் இருந்து புறப்படும் மின்சார ரெயில்களை பிடிக்கவும் அங்குள்ள தண்டவாளத்தை உயிரை பணயம் வைத்து ஆபத்தான நிலையில் கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் மன உளைச்சலுக்கு ஆளாவது மட்டுமின்றி, வேலைக்கு செல்லும் அவசரத்தில் ஆபத்தை உணராமலும் செல்கின்றனர். ரெயில் நிலைய அதிகாரிகளும், பொதுமக்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து பயணிகள் கூறியதாவது:-
காலை நேரங்களில் செங்கல்பட்டு-கடற்கரை இடையே மிக குறைந்த அளவிலேயே மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்த மின்சார ரெயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்படாததால் பயணிகள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை நாடவேண்டிய நிலை உள்ளது.
சில நேரங்களில் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட மின்சார ரெயிலை தாம்பரம் வந்ததும் நிறுத்திவிட்டு, தாம்பரத்தில் இருந்து மற்றொரு மின்சார ரெயில் முன்னதாக புறப்படுகிறது. இதனால் முன்னதாக புறப்படும் மின்சார ரெயிலை பிடிக்க பயணிகள் அவசர அவசரமாக தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். இந்த நிலையை கருத்தில் கொண்டு விரைவு மின்சார ரெயிலை, தெற்கு ரெயில்வே நிர்வாகம் இயக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.