3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய தாசில்தார்கள் வேறு இடங்களுக்கு மாற்றம்
மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய தாசில்தார்களை வேறு இடங்களுக்கு மாறுதல் செய்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.;
சிவகங்கை,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் தாசில்தார்கள், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டனர். பின்னர் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதைதொடர்ந்து 3 ஆண்டிற்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிபவர்கள் உள்பட 11 தாசில்தார்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.
மாற்றப்பட்டவர்களின் விவரம் வருமாறு:– சிவகங்கையில் தாசில்தாராக பணிபுரிந்த ராஜா திருப்புவனம் தாசில்தாராக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த பாலகிருஷ்ணன், சிவகங்கை சமூகபாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். காளையார்கோவிலில் தாசில்தாராக இருந்த பாலகுரு, இளையான்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த பஞ்சவர்ணம், சிங்கம்புணரி தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டார். சிங்கம்புணரி தாசில்தாராக இருந்த கண்ணன், சிவகங்கைக்கு மாற்றப்பட்டார்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குற்றவியல் பிரிவில் பணியாற்றிய மேசியதாஸ், தேவகோட்டை தாசில்தாராக மாற்றப்பட்டார். தேவகோட்டை தேசியநெடுஞ்சாலை அலுவலகத்தில் தனி தாசில்தாராக இருந்த சேது, நம்புகாளையார்கோவில் தாசில்தாராக மாற்றப்பட்டார்.
சிவகங்கை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக ராமகிருஷ்ணன், மானாமதுரை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். ஏற்கனவே மானாமதுரையில் பணிபுரிந்த மகேஸ்வரன், காளையார்கோவில் சமூகபாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டார்.
சிங்கம்புணரியில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக இருந்த மூர்த்தி, தேவகோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கு ஏற்கனவே பணியாற்றிய மாணிக்கவாசகம், சிங்கம்புணரியில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டார்.