பொதுமக்கள் சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு கல்விச்சீர்
பொதுமக்கள் சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு கல்விச்சீர் வழங்கப்பட்டது.
ஆவுடையார்கோவில்,
ஆவுடையார்கோவில் அருகே உள்ள ஆவணம்- பெருங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துவீரப்பெருமாள் தலைமை தாங்கினார். இதில் ஆவணம்-பெருங்குடி, சித்திரவிடங்கம், குணத்திரான்பட்டி, காவதுகுடி கிராமங்களை சேர்ந்த பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளிக்கு தேவையான மேஜைகள், நாற்காலிகள், பீரோ, தண்ணீர் தொட்டிகள், விளையாட்டு உபகரணங்கள், எழுது பொருட்கள் உள்ளிட்டவற்றை ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகுமாரியிடம் கொடுத்தனர். இதில் ஆசிரியர் பயிற்றுனர் தேவகி உள்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆவுடையார்கோவில் ஒன்றியம் வீரமங்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆவுடையார்கோவில் வட்டார அலுவலர் கோலதாபேபி தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் கண்ணையா வரவேற்றார். வீர மங்களம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அன்பழகன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து பொதுமக்கள், பெற்றோர்கள் சார்பில், பள்ளிக்கு தேவையான பொருட்களை பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினர். பின்னர் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.