9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை அவுரித்திடலில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அன்பழகன், ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த லட்சுமி நாராயணன், உயர்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் அந்துவன் சேரல் கலந்துகொண்டு பேசினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
சத்துணவு, ஊட்டச்சத்து ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும்.
3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடிவினை ரத்து செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. - யூ.கே.ஜி., வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின் படி புதிய ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த ராஜூ உள்பட 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட நிதிக்காப்பாளர் காந்தி நன்றி கூறினார்.