2 கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை: தே.மு.தி.க.வின் அரசியல் நாகரிகம் மக்களுக்கு தெரிந்து விட்டது
2 கட்சிகளுடன் கூட்டணி பேசியதில் இருந்து தே.மு.தி.க.வின் அரசியல் நாகரிகம் மக்களுக்கு தெரிந்து விட்டது என ஆர்.நல்லக்கண்ணு தெரிவித்தார்.
திருச்சி,
தே.மு.தி.க. 2 கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசியதில் இருந்தே அக்கட்சியின் அரசியல் நாகரிகம் பற்றி தற்போது மக்களுக்கு தெரிந்துள்ளது. இனி மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். மத்தியில் மத வெறி கொண்ட பாசிச ஆட்சி நீடிக்கக் கூடாது. இதனால் நாடு பிளவுபடுமே தவிர ஒற்றுமை இருக்காது. அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற கொள்கையில் பா.ஜ.க. உள்ளது.
சாதி, மதவெறியினை வைத்து ஆட்சியில் இருக்கலாம் என நினைப்பதால் பா.ஜ.க.வை எதிர்க்கிறோம். அனைத்து துறைகளும் கார்ப்பரேட்டுக்கு துணைபோகும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கொள்கைரீதியாக நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். போர்சூழலை பா.ஜ.க.வினர் பயன்படுத்துகிறார்கள். புலவாமா தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் பலியானதை அரசியலாக்குவது சரியல்ல. நாட்டின் வளர்ச்சி முழுமையாக பாதித்து விட்டது. பா.ஜ.க.வால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை என்ற பெயரில் பணம் வழங்குவதை தேர்தலுக்காக பயன்படுத்துகின்றன. கஜா புயலுக்கு ரூ.15 ஆயிரம் கோடி கேட்டும் ரூ.1,400 கோடி தான் வழங்கினார்கள். தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜ.க., அ.தி.மு.க. ஆட்சி மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு அரசுகளால் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.