தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த 2 வயது சிறுவன் சாவு

பெரியநாயக்கன்பாளையம் அருகே தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த 2 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.;

Update: 2019-03-09 22:45 GMT
பெரியநாயக்கன்பாளையம்,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் ராவுத்தகொள்ளனூர் மணிகவுண்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் சபரிவாசன் (2).

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி சபரிவாசன் வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது வீட்டில் ஒரு பாட்டிலில் டீசல் இருந்துள்ளது. வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் டீசலை தண்ணீர் என நினைத்து குடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுவன் வாந்தி எடுத்துள்ளான். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும் சபரிவாசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்ணீர் என நினைத்து டீசலை குடித்து சிறுவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்