மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திங்கள்சந்தை அருகே மனைவி கோர்ட்டில் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்ததால், தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-03-09 22:15 GMT
திங்கள்சந்தை,

திங்கள்சந்தை அருகே சடவிளையை சேர்ந்தவர் காந்தி குமார் (வயது 49). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு நகை கடையில், நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த சிந்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

இதையடுத்து காந்திகுமார் சடவிளையை சேர்ந்த தனது உறவினர் பெண்ணை 2–வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உண்டு. இந்த நிலையில் மூத்த மனைவி சிந்து, ஜீவனாம்சம் கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால், கடந்த சில நாட்களாக காந்தி குமார் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிய பின்பு, அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்