ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிநீர் வினியோகம் பாதிப்பு; சந்திரபிரபா எம்.எல்.ஏ. ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிநீர் வினியோகம் பாதிப்பு தொடர்பாக சந்திரபிரபா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தாமிரபரணி மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது அப்பகுதிகளுக்கு கடந்த 25 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இதுதொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திர பிரபா, அதிகாரிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். மேலும் குடிநீர் வினியோக பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்தார்.
இதைதொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சந்திரபிரபா எம்.எல்.ஏ. தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் நகராட்சி வார்டுகளில் குடிநீர் வினியோகம், சுகாதாரம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது குடிநீர் வினியோகம் இன்னும் இரு தினங்களில் சீராகி விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது நகராட்சி ஆணையாளர் மாணிக்க அரசி, முன்னாள் கவுன்சிலர் முத்தையா, நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், நகராட்சி மேலாளர் பாபு, பொறியாளர் ராமலிங்கம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.