பெண்கள் திறமையாக பணியாற்ற ஆண்கள் விடுவதில்லை அமைச்சர் கந்தசாமி வேதனை
பெண்கள் திறமையாக பணியாற்ற ஆண்கள் விடுவதில்லை என்று அமைச்சர் கந்தசாமி வேதனை தெரிவித்தார்.;
புதுச்சேரி,
புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் மூலம் சர்வதேச மகளிர் தின விழா பாக்குமுடையான்பட்டு பார்வதி திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. துறை இயக்குனர் யஷ்வந்தையா வரவேற்று பேசினார்.
விழாவில் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு திறன் மேம்பாட்டு திட்டமிடுதலுக்கான வாராந்திர குறிப்பேட்டை கல்லூரி மாணவிகளுக்கு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
மாணவிகளின் திறன் மேம்பாட்டிற்காக வாராந்திர குறிப்பேடு வெளியிட்டுள்ளோம். இதில் காலையில் இருந்து இரவு வரை என்னென்ன பணிகள் செய்யவேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளோம். அதன்படி மாணவ, மாணவிகள் செயல்படுகின்றனரா? என்பதை பள்ளி, கல்லூரி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் ஆய்வு செய்யவேண்டும். அதற்கு மதிப்பெண்ணும் வழங்கவேண்டும்.
பெண்கள் தனது திறமையினால் மற்றவர்கள் பயனடைய வேண்டும் என்று செயல்படுவார்கள். ஆனால் அவர்கள் திறமையாக பணியாற்ற ஆண்கள் விடுவதில்லை. பேராசிரியர் தம்பதிலேயே உப்புமாவில் விஷம் வைத்து கொலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. படித்த பேராசிரியர்களிடையே இதுபோன்ற சிந்தனை இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
99 பெண்கள் திறமை படைத்தவர்கள். துறை செயலாளர் சாதாரண ஊழியரைப்போல் செயல்படுகிறார். சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க விரைவில் சட்டம் கொண்டுவர வாய்ப்பு உள்ளது. அதன்படி புதுவையில் போட்டியிட பெண்கள் தயாராக வேண்டும். அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் நிறைய பேருக்கு முதியோர் உதவித்தொகை பெற்றுத்தர வேண்டும் என்று விண்ணப்பங்களை வாங்கி வைத்திருந்தனர். 21 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. அதிலிருந்து 5 நாளில் 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை கொடுக்க இரவும், பகலும் துறை அதிகாரிகள் பணியாற்றியதற்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.
நிகழ்ச்சியில் அரசு செயலாளர் ஆலிஸ்வாஸ், மகளிர் ஆணைய தலைவர் ராஜன்பாபு, காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி மனையியல் துறை உதவி பேராசிரியர் வண்டார்குழலி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் துணை இயக்குனர் வரலட்சுமி நன்றி கூறினார்.