ஈரோட்டில் ஜாக்டோ –ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் ஜாக்டோ –ஜியோ அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2019-03-08 21:24 GMT

ஈரோடு,

ஜாக்டோ –ஜியோ அமைப்பு சார்பில், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். பாஸ்கர்பாபு முன்னிலை வகித்தார்.

போராட்ட காலத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள், பணி மாறுதல் மற்றும் குற்ற வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் நேரு, குமரேசன், ஆனந்தகணேசன், ராஜசேகரன் மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்