அரக்கோணத்தில் கம்ப்யூட்டர் விற்பனை ஷோரூமில் திடீர் தீ விபத்து மின் கசிவு காரணமா?

அரக்கோணத்தில் கம்ப்யூட்டர் விற்பனை ஷோரூமில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.38 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.

Update: 2019-03-08 22:15 GMT
அரக்கோணம், 

அரக்கோணம் அசோக்நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந் தவர் ஜனார்த்தனன் (வயது 36), இவர் சுவால்பேட்டையில் கம்ப் யூட்டர், லேப்-டாப் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை ஷோரூம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஷோ ரூமை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று அதிகாலை 6.30 மணியளவில் கம்ப்யூட்டர் ஷோரூமில் இருந்து புகை வெளியே வந்தது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அரக்கோணம் தீயணைப்பு நிலையத்துக்கும், உரிமை யாளர் ஜனார்த்தனனுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அரக்கோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1½ மணி நேரம் போராடி தீயை அணைத்த னர்.

இதில் கடையில் இருந்த கம்ப்யூட்டர், லேப்-டாப், கண்காணிப்பு கேமராக்கள் உள்பட பொருட்கள் எரிந்து நாசமானது.

இதுகுறித்து தகவல் அறிந்த வுடன் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய குமார், இன்ஸ்பெக்டர் முத்து ராமலிங்கம், சப்-இன்ஸ்பெக் டர் பழனிச்சாமி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

கடையில் இருந்த ரூ.38 லட்சம் மதிப்புள்ள பொருட் கள் எரிந்து நாசமானதாக ஜனார்த்தனன் தீயணைப்பு அலுவலர்களிடமும், போலீ சாரிடமும் தெரிவித்தார்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று தீயணைப்பு அலு வலர்களும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்ற னர்.

இந்த சம்பவம் காரணமாக அரக்கோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்