அனலாக் முறையில் சிக்னல் வழங்கும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

டிஜிட்டல் முறையை பயன்படுத்தாமல் அனலாக் முறையில் சிக்னல் வழங்கும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2019-03-08 22:00 GMT
திருவண்ணாமலை,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மத்திய அரசின் டிராய் விதிமுறைகளின்படி கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் சேனலை தேர்வு செய்யும் முறையினை நடைமுறைப்படுத்தி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை அணுகி படிவங்களை பூர்த்தி செய்து பயனடையலாம். மேலும் அனலாக் சிஸ்டம் நிறுத்தப்பட்டு டிஜிட்டல் முறையில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கேபிள் டி.வி. ஒழுங்குமுறைச் சட்டம் 1995 சட்டப் ரிவு 4(3)ன் படி உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அனலாக் சிக்னலை முற்றிலும் தவிர்த்து டிஜிட்டல் சிக்னலாக மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் அனலாக் சிக்னல் முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டு டிஜிட்டல் முறையில் மட்டுமே டி.வி. சிக்னல் ஒளிபரப்பப்பட வேண்டும். அவ்வாறு டிஜிட்டல் முறையில் சிக்னல் வழங்காமல் அனலாக் முறையில் சிக்னல் வழங்கும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும்.

மேலும் கேபிள் டி.வி. சட்டம் 1995 பிரிவு 16(1)(ஏ)-ன் படி இந்தசட்டத்தின் விதிகளை மீறுவோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும்.

எனவே, கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அனைவரும் டிஜிட்டல் முறையில் மட்டுமே கேபிள் டி.வி. ஒளிப்பரப்பினை தொடர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்